விளையாட்டு

தொடர் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் வீரர்களுக்கு கிடைத்த பரிசு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சந்தித்த தொடர் தோல்விகளை அடுத்து, அந்த நாட்டு கிரிக்கெட் சபை கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது. 

இதற்கமைய, 2025-2026 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தில் எந்தவொரு கிரிக்கெட் வீரரையும் A பிரிவில் இணைக்காது இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் A பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். 

ஆனால் இந்த ஆண்டு, குறித்த இருவரும் B பிரிவிற்கு தரமிறக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு B பிரிவு ஒப்பந்தத்தில் இருந்த பாகிஸ்தான் டெஸ்ட் தலைவர் ஷான் மசூத், D பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையில், சட்டப் பிரச்சினை காரணமாக சுமார் 8 ஆண்டுகள் தனது மத்திய ஒப்பந்தத்தை இழந்த ஃபகர் ஷமானுக்கு இந்த ஆண்டு B பிரிவில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…