இலங்கை

மாங்குளத்தில் வெட்டு காயங்களுடன் பெண் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த ராமசாமி ராமயி எனும் 70 வயதான மூதாட்டி வீட்டில் சடலமாக கிடப்பதாக கிராமத்தவர்களால் நேற்று (22) மாலை மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது 

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இன்று (23) காலை கிளிநொச்சி தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

சடலத்தை நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

மூதாட்டியிடமிருந்து நகை உள்ளிட்ட பொருட்களை களவாடுவதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ள நிலையில், மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…