சிறையிலிருந்து வருத்தத்துடன் வௌியேறிய மஹிந்த

அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பது வருத்தம் அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

“நீங்கள் அரசியல் செய்தால், அது உங்கள் உரித்து… அவர் அதை எதிர்கொள்வார்” என்று மஹிந்த ராஜபக்ஷ கூறினார். 

மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளனர் என்றும், இதுபோன்ற செயல்கள் பழிவாங்கல் மட்டுமே என்றும் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் இன்னும் தன்னை நேசிக்கிறார்கள் எனக் கூறினார்.

“நாங்கள் மக்களை நேசிக்கிறோம். அதனால்தான் மக்கள் எங்களை நேசிக்கிறார்கள்…” என்றார்.

Exit mobile version