கைதுக்கு முன்னர் ரணில் வௌியிட்ட கருத்து!

தான் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல, நாட்டிற்காகச் செயல்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்படுவதற்கு முன்பு கருத்து வௌியிட்டுள்ளார். 

கொழும்பில் இன்று (23) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம், ரணில் விக்ரமசிங்கமவின் இந்த குரல் பதிவை ஊடகங்களுக்கு வௌியிட்டார். 

“நான் எப்போதும் நாட்டிற்காகவே உழைத்திருக்கிறேன். நான் தனிப்பட்ட காரணங்களுக்காக உழைத்ததில்லை. இந்த ஆட்சியின் உண்மை இப்போது வெளிவருகிறது. எல்லா இடங்களிலும் நடைபெறும் இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை.” என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

Exit mobile version