உலகம்

பாடசாலையில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை

தென் கொரியாவில் பாடசாலை மாணவ – மாணவிகள் இடையே தொலைபேசி பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனால் பாலியல் குற்றச் சம்பவங்கள், போதைப் பொருள் பயன்பாடு, ஆன்லைன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் மாணவர்கள் சிக்கி அவர்களின் வாழ்க்கை சீரழிவதாக புகார் எழுந்தது.

பாடசாலையில் மாணவ – மாணவிகள் தொலைபேசி பயன்பாடுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இங் பாடசாலையில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பதற்காக மசோதாவை நேற்று (27) பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.

இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.கள் ஆதரவு தெரிவித்தனர். 
 

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…