விளையாட்டு

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சுற்றுப்பயணத்திற்காக சரித் அசலங்க தலைமையிலான 17 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், இதில் அறிமுக வீரர்களான விஷேன் ஹெலம்பகே மற்றும் கமில் மிஷார ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். 

பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக, துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரத்ன, மஹிஷ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார மற்றும் மதீஷா பத்திரன ஆகியோரும் குழாமில் அடங்கியுள்ளனர். 

இலங்கை அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் நாளை முதலாவது ஒருநாள் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ள அதே நேரத்தில் டி20 தொடர் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி தொடங்கவுள்ளது.

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…