கனடா

தென் சீனக் கடலில் ஆஸ்திரேலியா,கனடா, பிலிப்பைன்ஸ் கூட்டு பயிற்சி

  தென் சீனக் கடலில், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் கூட்டாக இணைந்து இராணுவப் பயிற்சிகளை நடத்தியுள்ளன.

பிலிப்பைன்ஸ் வழிநடத்தலில் நடைபெற்ற இப்பயிற்சியில், பிலிப்பைன்ஸ் கடற்படையின் BRP Jose Rizal (வழிநடத்தும் ஏவுகணை கப்பல்), ஆஸ்திரேலியாவின் HMAS Brisbane (ஏவுகணை தாங்கி அழிப்புக் கப்பல்), கனடாவின் HMCS Ville de Québec (படைப்பிரிவு கப்பல்) ஆகியவை பங்கேற்றன.

அதோடு போர் விமானங்களும் பங்கேற்று, விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் சோதிக்கப்பட்டன.

இது தொடர்பில் பிலிப்பைன்ஸ் பாதுகாப்புத்துறை கூறுகையில், இப்பயிற்சி பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் எங்கள் உறுதிமொழிக்கான சான்றாகும் என தெரிவித்துள்ளது.

சீனாவின் ஆதிக்க இடத்தில்  மூன்று நாடுகளின் கூட்டு பயிற்சி தொடர்பில் சீனா இதற்கு உடனடி கருத்து வெளியிடவில்லை என்பதுடன், , Scarborough Shoal உள்ளிட்ட கடல்சார் பகுதிகள் மீது தமக்கே உரிமை உண்டு என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…