விளையாட்டு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சுப்பர் 04 சுற்றில் இதுவரை 02 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

இதன் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில்  இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் 06 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து,  02 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 02 புள்ளிகளுடன் பங்களாதேஷ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

அத்துடன் எதிர்கொண்ட 02 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் உள்ளன.

இதேவேளை இன்றைய தினம் இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…