வணிகம்

NDB சிறப்புரிமை வங்கிப்பிரிவு , ACH Education உடன் இணைந்து Global Education Expo 2025யை நடத்தியது

NDB சிறப்புரிமை வங்கிப்பிரிவானது [NDB Privilege Banking], ACH Education உடன் இணைந்து, சிறப்புரிமை வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்தியேக நிகழ்வான Global Education Expo 2025 கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வானது கொழும்பின் ஹவலொக்டவுனில் உள்ள NDB வங்கியின் சிறப்புரிமை வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் நடைபெற்றது, மேலும் இந்த நிகழ்வானது தங்கள் குழந்தைகளுக்கான உலகளாவிய கல்வி வாய்ப்புகளை ஆராய்வதில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களை ஒன்றிணைத்தது. 

இந்த கண்காட்சியானது பங்கேற்பாளர்களுக்கு 30 க்கும் மேற்பட்ட முன்னணி சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கான விலைமதிப்பற்ற அணுகலை வழங்கியது, இந்த பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, யூகே , கனடா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிரபலமான ஐரோப்பிய நாடுகள் போன்ற இடங்களில் கல்வித் திட்டங்கள், அனுமதி செயல்முறைகள், உதவித்தொகைகள் மற்றும் உயர்கல்விக்கான பாதைகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர். 

NDBயின் இந்த நிகழ்வானது, மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வெளிநாட்டு கல்வியை தடையின்றி வழங்க வடிவமைக்கப்பட்ட NDB மாணவர் கோப்பு முன்மொழிவின் தனித்துவமான நன்மைகளையும் எடுத்துக்காட்டியது. வெளிநாட்டில் கல்வி பயில்பவர்களுக்கு மாணவர் கோப்பு ஒரு விரிவான நிதி தீர்வாக செயல்படுகிறது, மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டணம் செலுத்துதல், பணம் அனுப்புதல் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வங்கி சேவைகளுக்கான நம்பகமான கட்டமைப்பை வழங்குகிறது. 

Global Education Expo 2025 சுமார் 50 மதிப்புமிக்க சிறப்புரிமை வங்கிப்பிரிவு வாடிக்கையாளர்களை வரவேற்றது, அவர்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகங்களிலிருந்து நிபுணர் வழிகாட்டுதலை மட்டுமல்லாமல், NDB சிறப்புரிமை தொடர்பு முகாமையாளர்களின் தனிப்பயனாக்கப்பட்ட வங்கி ஆலோசனையையும் வழங்கியது. இந்த நிகழ்வு, அதன் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான சில மைல்கற்களில், குறிப்பாக அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் தொழில்முறை பயணங்களை வடிவமைப்பதில் ஆதரவளிப்பதில் NDB-யின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. 

NDB சிறப்புரிமை வங்கிப்பிரிவானது,ACH Education போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுடனான பங்குடைமைகள் மூலம், பாரம்பரிய வங்கிச் சேவைகளுக்கு அப்பாற்பட்ட பிரத்தியேக அணுகல், வடிவமைக்கப்பட்ட தீர்வுகள் மற்றும் தடையற்ற நிதிச் சேவைகள் மூலம் தனது வாடிக்கையாளர்களை மேம்படுத்துவதில் முன்னணியில் உள்ளது.

What's your reaction?

Related Posts

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியுடன் கைகோர்த்து அமெரிக்க உறக்கம்சார் தீர்வுகள் வழங்குனரான Englander இலங்கையில் பிரவேசம்

இலங்கையின் மாபெரும் மற்றும் பரந்தளவு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை…