No products in the cart.
வெளிநாட்டுக் கல்வியைத் தொடரும் மாணவர்களை வலுப்படுத்த NDB வங்கி ABEC உடன் பங்குடைமை
NDB வங்கியானது , முன்னணி சர்வதேச கல்வி ஆலோசனை நிறுவனமான ABEC (அவுஸ்திரேலிய வர்த்தக கல்வி நிலையம்) உடன் புதிதாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மூலம் இலங்கை மாணவர்கள் உலகளாவிய கல்வி வாய்ப்புகளைத் தொடர உதவுவதற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இரு நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளின் பங்கேற்புடன் அதிகாரப்பூர்வ கைச்சாத்திடும் நிகழ்வு நடைபெற்றது. NDB வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தனிநபர் வங்கியியல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்திற்கான சிரேஷ்ட துணைத் தலைவர் திரு. சஞ்சய பெரேரா மற்றும் சில்லறை வங்கிப்பிரிவுக்கான துணைத் தலைவர் திரு. செஹான் ஹமீத் ஆகியோர் கலந்து கொண்டனர். ABEC சார்பாக அதன் முகாமைத்துவப்பணிப்பாளர் திரு. எச்.ஜே.எம் திலீப் குமார மற்றும் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. என்.எஸ்.அமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பங்குடைமையானது NDB இன் விரிவான வங்கித் தீர்வுகளையும், கல்வி ஆலோசனை மற்றும் சர்வதேச மாணவர் வேலைவாய்ப்புகளில் ABEC இன் உலகளாவிய நிபுணத்துவத்தையும் ஒன்றிணைக்கிறது. ABEC, ஆனது ஆயிரக்கணக்கான மாணவர்களை நியாயமான கட்டணங்களில் , உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வியை நோக்கி வழிநடத்தும் சாதனைப் பதிவோடு, பல்கலைக்கழகத் தெரிவு மற்றும் பாடநெறி பொருத்தம் முதல் விசா விண்ணப்பம் மற்றும் புறப்படுவதற்கு முந்தைய சேவைகள் வரை முழு சேவைகளையும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்குகிறது.
இந்தஒத்துழைப்பின் மூலம், NDB வங்கியானது , மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீதான நிதிச் சுமையைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட கல்விக் கடன் திட்டங்கள், அந்நியச் செலாவணி சேவைகள் மற்றும் ஆலோசனை ஆதரவு உள்ளிட்ட சிறப்பு நிதியியல் சேவைகளை வழங்கும். இந்த முயற்சி, நிதி அணுகல் மற்றும் வசதியை மேம்படுத்தும் அதே வேளையில், இலங்கையர்கள் தங்கள் அபிலாஷைகளை அடைவதில் ஆதரவளிக்கும் வங்கியின் நோக்கத்துடன் இசைந்ததாகவுள்ளது.
இந்த பங்குடைமை தொடர்பாக திரு. சஞ்சய பெரேரா கூறுகையில், “NDB-யில், கல்வியின் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். ABEC உடனான இந்தபங்குடைமையானது வெளிநாட்டில் கல்வி கற்க வேண்டும் என்று கனவு காணும் மாணவர்களுக்கான நிதி மற்றும் தகவல் இடைவெளிகளைக் குறைக்க உதவுகிறது. ABEC-இன் விரிவான ஆலோசனை அனுபவத்துடன் எங்கள் வங்கி வலிமையை இணைப்பதன் மூலம், எதிர்கால சந்ததியினருக்கு ஆற்றலினை அளித்து வெளிநாட்டுக் கல்வியை தடையற்றதாக மாற்றுகிறோம்.”
NDB வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு நடைமுறை, வாழ்க்கையை மேம்படுத்தும் நன்மைகளை வழங்கும் மூலோபாய பங்குடைமைகளை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது. இந்த பங்குடைமையுடன், இலங்கை இளைஞர்களை நம்பிக்கையுடனும் எளிதாகவும் உலகளாவிய கல்விப் பாதைகளை ஆராய்வதற்கான ஆற்றலை வழங்குவதில் வங்கி தொடர்ந்து முன்னணியில்உள்ளது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.