இலங்கை

பத்தேகம பிரதேச சபை உப தலைவர் மீது கொடூர தாக்குதல்!

பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்று (24) மாலை இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அவர் தனது மனைவியுடன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, பத்தேகம, கொடகந்த பகுதியில் வீதியை மறித்து அவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

உப தலைவர் தற்போது காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், தாக்குதல் தொடர்பில் பொத்தல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பத்தேகம பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 

தாக்குதல் தொடர்பாக பொத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…