இலங்கை

தொடாங்கொடையில் விபத்து: இளைஞன் பலி!

தொடாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட – புஹாபுகொட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

மலபட சந்தியில் இருந்து புஹாபுகொடை நோக்கிப் பயணித்த ட்ரக்டர் ரக வாகனம் ஒன்று, அதற்கு எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியும் பின்னால் பயணித்தவரும் காயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணித்தவர் உயிரிழந்தார். 

இவ்வாறு உயிரிழந்தவர் 29 வயதுடைய யடதோல, பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சடலம் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தொடாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…