இலங்கை

இலங்கை கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை

அத்துமீறி நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9 ஆம் திகதிகளில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று (10) இடம்பெற்றது. 

இதன்போது சந்தேகநபர்களை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். 

வழக்கினை ஆராய்ந்த நீதவான் அவர்களில் 26 மீனவர்களுக்கு 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

அத்துடன் இரண்டு படகு ஓட்டிகளுக்கும் ஒரு படகின் உரிமையாளருக்கும் 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் அவர்களுக்கு தலா 4 மில்லியன் அபராதத்தையும் செலுத்துமாறும் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…