No products in the cart.
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் சபாநாயகர் தலைமையில் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த குழுநிலை விவாதமானது இன்று (15) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் மு.ப. 09.00 – மு.ப. 09.30 மணி வரையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறவுள்ளது.
மு.ப. 09.30 – மு.ப. 10.00 மணிவரையில் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப. 10.00 – மு.ப. 10.30 வரையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது
மு.ப. 10.30 – பி.ப. 6.00 மணி வரையில் வரவு செலவு திட்டம் – 2026 – குழு நிலை விவாதம் நடைபெறும்.
பி.ப. 6.00 – பி.ப. 6.30 மணிவரையில் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை முன்வைக்கப்படும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
















