இலங்கை

கொக்கைன் போதைப்பொருளுடன் மலேசிய பிரஜை கைது

05 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் மலேசிய நாட்டைச் சேர்ந்தவருடன், அவர் அபுதாபிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலைய சுங்க போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…