இலங்கை

வவுனியாவில் கஞ்சா செடி விவகாரம் ஒருவர் கைது!

வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

குறித்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றது. 

அதே பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டதுடன் கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டது. 

கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரகீத் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…