இலங்கை

வெளிநாட்டு குற்றவாளி ஒருவரின் நெருங்கிய சகா கைது!

துப்பாக்கி ஒன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்றும் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் மனிதக் கொலைகள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (20) இரவு மீகலேவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சியம்பலன்கமுவ பகுதியில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஆவார். குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் டி-56 ரக துப்பாக்கி ஒன்றுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், இவர் வெளிநாட்டில் வசிக்கும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரின் நெருங்கிய சகா என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

மனிதக் கொலைகள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…