இலங்கை

இலங்கை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 93 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

இறுதி நேரத்தில் துடுப்பாட களம் புகுந்த துனித் வெல்லாலகே அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் ஆதில் ராசிட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்தநிலையில் இங்கிலாந்து அணிக்கு 272 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…