இலங்கை

தீகல சமனின் 2 கோடி பெறுமதியான வீடு முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தற்போது சிறையில் உள்ள தீகல சமன் எனப்படும் அஜித் பெரேரா என்பவரின் சொகுசு வீடொன்றை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது. 

2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குறித்த வீடு, அவிசாவளை, தெஹியோவிட்ட பகுதியில் அமைந்துள்ளது. 

அந்த வீட்டை அவர் தனது கள்ளக்காதலிக்கு கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபரால் அந்த வீட்டை கொள்வனவு செய்வதற்காக பணம் பெற்ற வழியை தெளிவுபடுத்த முடியாமல் போனதால், அது போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

எனவே குறித்த வீட்டை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…