இலங்கை

பங்களாதேஷ் புதிய பிரதமர் – நளிந்த ஜயதிஸ்ஸ விசேட சந்திப்பு

பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கும், இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 

இந்தக் கலந்துரையாடல் நேற்று (17) மாலை அந்நாட்டுப் பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. 

இதன்போது, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்களாதேஷின் புதிய பிரதமருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

கடந்த டித்வா புயலின் போது பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்தார். 

அத்துடன், பங்களாதேஷின் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் ஈர்ப்பது, சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துவது மற்றும் மருந்து உற்பத்தித் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

இக்கலந்துரையாடலில் பங்களாதேஷிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தர்மபால வீரக்கொடியும் கலந்துகொண்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…