இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கில் சாட்சியங்கள் பதிவு!

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இதன்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் வழிநடத்தலின் கீழ் முறைப்பாட்டாளர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

2010ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அமைச்சராகப் பணியாற்றியபோது, தனது சட்டபூர்வமான வருமானத்தையும் மீறி சுமார் 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் காணிகளைச் சட்டவிரோதமான முறையில் ஈட்டியதன் மூலம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…