இலங்கை

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு ஒரு வார காலத்திற்காக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரையிலான வரம்பிற்குள் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார். 

போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். 

இதன்படி, பேருந்துகள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் அவற்றுக்கான எரிபொருள் அளவு தீர்மானிக்கப்படும். 

இந்த நடைமுறை முறைப்படுத்தப்படும் வரை, பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்துச் சபையிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…