இலங்கை

CCTV -இல் பதிவான தலைக்கவச தாக்குதல்!

குளியாபிட்டிய, மீகஹகொட்டுவ சந்தியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மற்றொரு ஓட்டுநரைத் தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


CCTV காட்சிகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குளியாபிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப் பெறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


குளியாபிட்டிய – பன்னல வீதியிலிருந்து வந்த நபர், குளியாபிட்டியவிலிருந்து மாதம்பே பிரதான வீதி வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைத் தாக்கும் காட்சி CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.


குளியாபிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கமல் ரத்நாயக்க மற்றும் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் நலின் மஹீபால உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…