இலங்கை

எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு தேடி ரஷ்யா செல்லும் அமைச்சர் விஜித

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்குத் தேவையான எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வது குறித்து மாஸ்கோவில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை அவர் முன்னெடுக்கவுள்ளார்.

கடந்த வாரம் ரஷ்யாவின் பிரதி வெளியுறவு மற்றும் எரிசக்தி அமைச்சர்கள் கொழும்புக்கு வருகை தந்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய நிலையில் இந்த விஜயம் அமையவுள்ளது.

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்கா அண்மையில் தளர்த்தியுள்ள சூழலில், அமைச்சரின் இந்தப் பயணம் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…