இலங்கை

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏப். 27 முதல் ஏற்பு

பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை கேட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் வெளியாகியிருந்த A/L பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என அந்த ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

அதற்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க 3 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை பல்கலைக்கழக அனுமதி தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய கைநூல் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…