No products in the cart.
திறைசேரி நிதி முறைகேடு குறித்து முழுமையான விசாரணை கோரிக்கை
அண்மையில் திறைசேரியிலிருந்து பெருந்தொகை பணம் மாயமான விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் பணம் ஹக்கர்களின் கைகளுக்குச் சென்றிருந்தால் அதனை மீட்பதுடன் நின்று விடாது அது எவ்வாறு அவர்களின் கைகளுக்கு சென்றது என்பதை கண்டறிய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சில இந்த தொகை சிறிய தொகை என கூறி வருவதாகவும் தொகை சிறிதோ பெரிதோ இவ்வாறான சம்பவங்கள் மீள இடம்பெறுவதனை தடுக்கவும் பாரிய மோசடிகளை தவிர்ப்பதற்கும் உரிய விசாரணைகள் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
ஹக்கர்களின் கைககளுக்குச் சென்ற பணத்தை மீள பெற்றுக்கொள்ள முடியும் என நினைப்பதே ஏமாற்று வேலை என குறிப்பிட்டுள்ளார்.
பாரிய மோசடிகள் இடம்பெற்றதன் பின்னர் பிரச்சினையை மூடி மறைப்பதற்கு சிலர் ஊகங்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் பிடிபட்டால் பணம் செலவழிந்து விட்டது என கூறுவார் எனவும் அதற்கு முன்னர் குற்றவாளிகளை பிடிக்க வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.















