இலங்கை

சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்று – கொழும்பில் விசேட போக்குவரத்து

“எஹிபஸ்ஸிக்கோ” (Ehipassiko) சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாளான இன்று அதற்கான அரச விழா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

இன்று நண்பகல் 12:00 மணிக்கு களனி ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கிச் செல்லும்.

கொழும்பில் நடைபெறவுள்ள சமாதான நடைபவனி திட்டத்திற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நடைபவனி இன்று (28) மாலை 4.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள அரச விழாவைத் தொடர்ந்து  கங்காராம விகாரையை சென்றடைந்து நிறைவடையவுள்ளது.

இதன்காரணமாக, இன்று முற்பகல் 11.00 மணி முதல் பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை, மருதானை வீதி, நந்ததாச கோதாகொட மாவத்தை, வோர்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எஃப். ஆர். சேனாநாயக்க மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, ஹோர்டன் சுற்றுவட்டம், மற்றும் கங்காராம விகாரையை அண்மித்த வீதிகள் உட்பட பல பிரதான வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

எனவே, வாகன நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகள் மற்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

அஹிம்சை மற்றும் அமைதிச் செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் அரச அனுசரணையுடன் கூடிய “சர்வதேச அமைதி பாதயாத்திரை” கடந்த 21 ஆம் திகதி அனுராதபுரத்தில் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…