இலங்கை

லொறி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயம்


புத்தளம் மதுரங்குளி நகரில் இன்று (08.05.2026) கொள்கலன் லொறியொன்று விபத்துக்குள்ளாகியதில் லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன் பேருந்து தரிப்பிடம் முழுமையாக சேதமடைந்துள்ளது.

மதுரங்குளி நகரின் பிரதான பாடசாலைக்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றதே விபத்துக்குக் காரணமாகியுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியோரத்தில் இருந்த பேருந்து தரிப்பிடத்தில் மோதியதில் அது முற்றாக சேதமடைந்துள்ளது.

மேலும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனமும் லொறியுடன் மோதி சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…