இலங்கை

சேனவல்லி குளத்தில் மூழ்கி நபர் ஒருவர் பலி

தம்பலகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனவல்லி குளத்தில் மூழ்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் தம்பலகமுவ, அர்பா நகர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவராவார்.

குறித்த நபர் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, மயக்கமடைந்து நீரில் மூழ்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தம்பலகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…