இலங்கை

தெற்கு அதிவேக வீதியில் விபத்து – மூவர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சூரியவெவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (28) இரவு விபத்தொன்று சம்பவித்துள்ளது. 

இந்த விபத்தில் காயமடைந்த மூவர் எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலியில் டிப்பர் வாகனம் ஒன்று மோதியுள்ளதுடன், அதற்கு பின்னால் வந்த கொன்கரீட் கலவை இயந்திர வாகனமொன்று டிப்பர் வாகனத்தின் பின்புறத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…