இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரமின்றி பேருந்தை செலுத்திய நபர்


சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் அதிக பயணிகளுடன் பேருந்தை பிரதான வீதியில் செலுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹட்டன் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர். 

சந்தேக நபர் ஹட்டன் – டிக்கோயா சலங்கந்த பகுதியிலிருந்து தினமும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்தை செலுத்தி வந்து, பின்னர் பயணித்தின் இடையில் மற்றொரு சாரதிக்கு பேருந்தை ஒப்படைப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த பேருந்து ஹட்டன் – சலங்கந்த வழியாக அதிக ஆபத்தான செங்குத்து மற்றும் வளைவுகள் கொண்ட பாதையில் பயணிக்கின்றது. 

இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். 

சம்பவம் தொடர்பில் பேருந்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…