இலங்கை

பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனச் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை

இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவுவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

இதன்படி, குறித்த சரத்துகள் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இருப்பினும், குறித்த சரத்துகளைத் திருத்தியமைத்து அல்லது நீக்கி, சாதாரண பெரும்பான்மையுடன் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்தச் சட்டமூலத்திற்கு அமைய, முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டவாக்கத்தின் மூலம் குறித்த நிறுவனம் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக நிறுவப்படவுள்ளது. 

இலங்கையின் ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு உயரிய தரநிலைகளை அறிமுகப்படுத்துவதையும் அதனைப் பேணி வருவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…