உலகம்

பஹல்​காமில் தீவிரவாதிகளுக்கு உதவியவர்கள் கண்டுபிடிப்பு!

காஷ்மீரின் பஹல்​காமில் தாக்குதல் நடத்திய தீவிர​வா​தி​களுக்கு உள்​ளூரில் உள்ள காஷ்மீர் ஆதர​வாளர்​கள் (காஷ்மீரி ஓவர்​கிர​வுண்ட் ஒர்க்​கர்ஸ் – ஓஜிடபிள்​யூ) உதவி செய்​துள்​ளதை புல​னாய்​வுத் துறை அதி​காரி​கள் கண்​டு​பிடித்​துள்​ளனர்.

தீவிர​வா​தி​கள் தங்​கு​வதற்கு இடம், உணவு போன்ற வசதி​களை செய்து கொடுப்​பவர்​களை ஓவர்​கிர​வுண்ட் ஒர்க்​கர்ஸ் என்று அழைக்​கின்​றனர். இதுகுறித்து புல​னாய்​வுத் துறை அதி​காரி​கள் நேற்று குறிப்பிடுகையில்,

பஹல்​காமில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​களுக்கு உள்​ளூர் ஆதர​வாளர்​கள் 15 பேர் உதவியது எலக்ட்​ரானிக் கருவி​களை ஆய்வு செய்த போது தெரிய வந்​தது.

முக்​கிய குற்​ற​வாளி​களாக 5 பேர் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளனர். அவர்​களில் 3 பேர் பிடிபட்​டுள்​ளனர். மற்ற 2 பேரை தீவிர​மாக தேடி வரு​கிறோம். தாக்​குதல் நடந்த 22 ஆம் திகதி வரை அவர்​களு​டைய தொலைபேசிகள் உட்பட இலத்திரனியல் கருவி​கள் இயங்​கி​யுள்​ளன. அதன்​பிறகு அவை அணைக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும் மற்ற 10 பேரிடம் என்​.ஐ.ஏ, காஷ்மீர் பொலிஸ், புல​னாய்வு பிரிவு, ரோ போன்ற அமைப்​பினர் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​கள் இன்​னும் பஹல்​காம் பகு​தி​யில் அடர்ந்த வனப்​பகு​தி​யில் பதுங்​கி​யிருக்​கலாம் என்று சந்​தேகிக்​கிறோம்.  வனப்​பகு​தி​யில் தீவிர தேடு​தல் வேட்டை நடத்​தப்​பட்டு வரு​கிறது என்று தெரி​வித்​தனர்.

தாக்​குதல் நடந்த கடந்த 6 நாட்​களில் 10 தீவிர​வா​தி​களின் வீடு​களை இந்திய பாது​காப்​புப்​ படை​யினர்​ இடித்​து தரைமட்​ட​மாக்​கி உள்​ளனர்​.

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…