இலங்கை

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தாழிறங்கும் அபாயம்!

கடும் மழை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதியில் வீதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம். சாதிக் தெரிவித்தார். 

வீதி தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ள குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 

இதேவேளை, நிலவும் கடும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கித்துல்கல வரை வாகனங்களைச் செலுத்தும் போது மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு நிறைவேற்றுப் பொறியியலாளர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…