இலங்கை

சர்ச்சைக்குரிய வாகன இறக்குமதிக்கு தீர்வு காண விசேட குழு

கடனுறுதிக் கடிதங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், இறுதி சுங்கத் தீர்வை வழங்க மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் தீர்வொன்றைப் பரிந்துரைப்பதற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவாவிடம் வினவியபோது அவர் இதனை உறுதிப்படுத்தினார். 

குறிப்பிட்ட வாகன இறக்குமதி தொடர்பில் காணப்படும் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அவற்றுக்கு பொருத்தமான இணக்கப்பாட்டை எட்டுவதற்குத் தேவையான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதே இக்குழுவின் பிரதான பணியாகும்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…