இலங்கை

ரியாத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை நாளை வரை இடைநிறுத்தம்

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான தனது விமான சேவைகளை நாளை (10) வரை ரத்து செய்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலைகளே இந்தத் தீர்மானத்துக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் காரணமாக உலகம் முழுவதிலுமிருந்து ரியாத் நகரை நோக்கிச் செல்லும் 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…