விளையாட்டு

இலங்கைக்கு 8 விக்கெட்டுக்களால் அபாரமான ஆறுதல் வெற்றி!

ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. 169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி, தொடக்கம் முதலே அதிரடியான மற்றும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதற்கமைய, 17.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 87 ஓட்டங்களை (9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசினார்.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…