No products in the cart.
கொழும்பில் மரணித்த மாணவி – கல்வி கற்ற பாடசாலை அதிபருக்கு திடீர் இடமாற்றம்
கொட்டாஞ்சேனையில் தன்னுயிர் மாய்த்த பாடசாலை மாணவி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த மாணவி முன்னர் கல்விகற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
.பதில் அதிபராக கடமையாற்ற, கல்வியமைச்சின் உத்தியோகத்தர் ஒருவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி மாணவி விடயத்தில் மேற்படி பாடசாலை நிர்வாகம் அசமந்தப் போக்கில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.