இலங்கை

போதைப்பொருட்களுடன் 344 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (11) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 344 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 109 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 117 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 116 பேரும், மாவா போதைப்பொருளுடன் 02 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 157  கிராம் 430 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 199 கிராம் 338 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 03 கிலோ 912 கிராம் 540 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 25 கிராம் 70 மில்லிகிராம் மாவா போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…