உலகம்

வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் – வீடியோ வைரல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் இன்று சோதனையின்போது வெடித்துச் சிதறியது.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் இன்று (19) சோதனைக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் இந்த ராக்கெட் சோதனையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சோதனை நேரத்துக்கு சற்று முன்பாக இயந்திரம் இயக்கப்பட்ட நிலையில் ராக்கெட் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்பாகவும் புகைமூட்டமாகவும் காணப்பட்டது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த இந்த ஸ்டார்ஷிப் விண்கலத்தை எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி விண்ணுக்கு அனுப்ப ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…