உலகம்

இஸ்ரேல் வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் 90 சதவீதத்தை எட்டி விட்டதாகவும், இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி இஸ்ரேல், ஈரான் மீது கடந்த 13ஆம் திகதி கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

தொடர்ந்து 7 ஆவது நாளாக இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், இராணுவ கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது. அதேபோல் இஸ்ரேலின் டெல்அவிவ், ஹைபா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள சொரோகா வைத்தியசாலையின் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் வைத்தியசாலையில் சில பகுதிகள் சேதமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…