விளையாட்டு

இலங்கை – சிம்பாப்வே இறுதி ஒருநாள் போட்டி இன்று

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.


ஹராரே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அதன்படி, இந்த ஒருநாள் தொடரில் தற்போது இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருபதுக்கு 20 தொடர் செப்டம்பர் 3, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது

இந்த மூன்று போட்டிகளும் ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…