விளையாட்டு

வரலாற்று சாதனை படைத்த ரஷீத் கான்!

ஷார்ஜாவில் நேற்று (01) இரவு நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ரஷீத் கான் படைத்தார். 

இதற்கு முன்பு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியை 165 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது 166 விக்கெட்டுகள் வீழ்த்தி ரஷீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார். 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 150 விக்கெட்டுகளுடன் இஸ் சோதி 3 ஆம் இடமும், 149 விக்கெட்டுகளுடன் ஷாகிப் அல் ஹசன் 4 ஆம் இடமும், 142 விக்கெட்டுகளுடன் முஸ்தபிசுர் ரகுமான் 5 ஆம் இடத்திலும் உள்ளனர்.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…