தொழில்நுட்பம்

இன்று ஆப்பிள் குடும்பத்தில் இணையவுள்ள புதிய மொபைல்கள்

உலகின் முன்னணி கையடக்க உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் ஆண்டு தோறும் தனது வருடாந்த நிகழ்வில் தனது நிறுவன கைப்பேசிகள் மற்றும் ஆப்பிள் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட சாதனங்களின் புதிய அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். 

அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு இன்று நடைபெறும் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்நிகழ்வில் ஐபோன் 17 சீரிஸ் கைப்பேசிகள் உட்பட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 எயார் என நான்கு புதிய வகையான கைப்பேசிகள் அறிமுகமாக உள்ளன. 

ஐஓஎஸ் 26 இயங்குதளத்தில் இந்த கைப்பேசிகள் வெளியாக உள்ளன. 

இது ஐபோன் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 மணி முதல் ஐபோன் 17 எயார் ஆகியனவற்றின் வெளியீடு நேரலை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர 

நவலோக்க ஹொஸ்பிடல்ஸ் பி.எல்.சி மூலம் தெற்கு ஆசியாவின் முதல் AI தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்பட்ட MRI ஸ்கேனரை அறிமுகப்படுத்தியதன் மூலம், முன்னணி நவீன மருத்துவ உபகரணங்கள் சப்ளையர் நிறுவனமான Mediequipment Limited, இலங்கையின் சுகாதார பாதுகாப்பு…