இலங்கை

ரணில் தலைமையில் ஐ.தே.க ஆண்டு விழா

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள அவரது அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா ஏற்கனவே கடந்த 6ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு கட்சியின் முகாமைத்துவ குழு, விழாவை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்திருந்தது.

அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…