No products in the cart.
வவுனியா மாநகரசபையின் துணை முதல்வரை பதவி விலககோரி அழுத்தமா..!
வவுனியா மாநகர சபையின் துணை முதல்வரை பதவி விலக கோரி அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா மாநகர சபையினால் நடை பாதை வியாபாரம் முற்றிலும் தடைசெயப்பட்டு அவர்களுக்கான மாற்றிடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வவுனியா மொத்த மரக்கறி வியாபார நிலையங்களும் பொருளாதார வர்த்தக மையத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் உள்ள இஸ்லாமிய சமூகம் சார்ந்தவர்களின் சிறு வியாபார நிலையங்களும் நடைபாதையில் இருப்பதால் அவற்றையும் அகற்றுவதற்கு வவுனியா மாநகரசபையின் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் கடும் முயற்சி எடுத்துவரும் நிலையிலேயே அவரை பதவி விலக செய்யுமாறு ஒரு சில அரசியல்வாதிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.