விளையாட்டு

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் புகார்!

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்று (14) இடம்பெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பாட்டத்தாடிய பாகிஸ்தான் 127 ஓட்டங்களில் சுருண்டது.

இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 131 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

வெற்றிக்கு பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்தனர்.

முன்னதாக நாணய சுழற்சியில் போடும் போதும் கை குலுக்கல் நடைபெறவில்லை. இதே போல இந்திய வீரர்கள் அறையும் மூடப்பட்டது. 

இது குறித்து சூர்யகுமார் யாதவ் தெரிவிக்கும் போது, 

‘நாங்கள் விளையாட மட்டுமே வந்தோம். நாங்கள் அவர்களுக்கு பதில் அளித்தோம். சில விஷயங்கள் விளையாட்டு திறனுக்கு அப்பாற்பட்டது’ என தெரிவித்தார். 

பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் ஆகா தெரிவிக்கும் போது, 

‘நாங்கள் கைகுலுக்க விரும்பினோம். ஆனால் எதிர் அணி வீரர்கள் அதை செய்யாததால் ஏமாற்றம் அடைந்தோம். எங்களது ஆட்டத்திலும் ஏமாற்றம் அளித்தது. ஆனாலும் கைகுலுக்க விரும்பினோம்’ என்றார். போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவை பாகிஸ்தான் அணி தலைவர் புறக்கணித்தார். 

இதற்கிடையே கை குலுக்காதது தொடர்பாக இந்திய அணிக்கு எதிராக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்தது. இதற்கிடையே கைகுலுக்காமல் இருப்பது குறித்து இந்திய அணி ஏற்கனவே போட்டி நடுவரிடம் தெரிவித்து இருந்தது.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…