விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4
சுற்றுப்போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இன்று (20) இரவு 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி சூப்பர் 4 சுற்றில் மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதன்படி,எதிர்வரும் 23 ஆம் திகதி அன்று அபுதாபியில் பாகிஸ்தானுடனும், செப்டம்பர் 26 ஆம் திகதி அன்று துபாயில்
இந்தியாவுடனும் இலங்கை அணி மோதவுள்ளது.

சூப்பர் 4 சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…