உலகம்

பலஸ்தினத்திற்கு வலுக்கும் உலகளாவிய ஆதரவு

லஸ்தீனத்திற்கு உலகளவில் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 145 க்கும் மேற்பட்ட நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான உறுதியை வெளிப்படுத்தியுள்ளன.

பலஸ்தீன் தேசிய கவுன்சில் (PNC) 1988 ஆம் ஆண்டு தனிநாட்டு அறிவிப்பு வெளியிட்டபின் பல நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தன.

அதன் பின் 1990கள், 2000கள் மற்றும் 2010களில் பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளும் இதே பாதையை பின்பற்றின.

2024 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் பார்படோஸ், ஐர்லாந்து, ஜமைக்கா, நோர்வே, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் கரீபிய நாடுகள் பலஸ்தீனை அங்கீகரித்தன.

ஐரிஷ் பிரதமர் சைமன் ஹாரிஸ், “காசாவில் நடக்கும் மனிதாபிமான பேரழிவை நிறுத்த உலகத்தின் குரலைக் கேளுங்கள்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கு வலியுறுத்தினார்.

அண்மையில், கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் பலஸ்தீனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, G7 குழுவின் முதல் நாடுகளாக மாறின.

பின்னர் அவுஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் இதைத் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டன.

இதனுடன், பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பலஸ்தீனை அங்கீகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த பரவலான அங்கீகார அலை, அமெரிக்காவை அதன் நெருக்கமான கூட்டாளிகளிடையே தனிமைப்படுத்துகிறது.

இஸ்ரேலின் காசா போர் நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளைத் தடுத்த விதத்திற்கான சர்வதேச விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், பல நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றத் தொடங்கியுள்ளன.

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் இந்த அங்கீகாரங்களை “ஹமாஸுக்கு வழங்கப்படும் பரிசு” எனக் கூறி மறுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பலஸ்தீன் அங்கீகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…