இலங்கை

நாட்டில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை

நாட்டில் இன்று (23) ஒரு பவுண் தங்கத்தின் விலை 1800 ரூபாவால் உயர்ந்துள்ளது.

செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 

நேற்றைய தினம் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 277,500 ரூபாயாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 300,000 ரூபாயாகவும் காணப்பட்டது. 

இந்நிலையில் இன்றைய தினம் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 279,300 ரூபாயாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 302,000 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

இதற்கமைய இன்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 

இந்த மாத ஆரம்பத்தில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 257,200 ரூபாயாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 278, ரூபாயாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…